Also Watch
Read this
By: Manigandan Raja

திரிஷாவின் நாய்க்குட்டி குறித்து பேசிய விஷ்ணு விஷால்
பிரபல நடிகை திரிஷா நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்னு நம்ம எல்லாத்துக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இவர் ஆசையாக வளர்த்து வந்த 'ஸோரோ' என்ற நாய், 2024-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாள் அப்போ இறந்ததுருந்துச்சு.

இதன் பின், நடிகை திரிஷா 'இஸ்ஸி' என்ற நாய் குட்டியை தற்போது வளர்த்து வராங்க. இந்த நிலையில், திரிஷா வளர்க்கும் நாய் குட்டி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் ஒன்றில் பேசிருக்காங்க அதில், "நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை சொன்னதே இல்லை அது என்னன்னா, இப்போது திரிஷாவிடம் இருக்கும் நாய், என்னுடைய 'டெடி' என்ற செல்ல நாயின் மகள்தான்.
அது ஒரு பூடில் இன நாய். அதே மாதிரி, எனது மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள். அதுமட்டுமல்லாமல், இரண்டு பேரும் அடிக்கடி நாய்கள் பற்றியே பேசிட்டு இருப்பாங்க. இதை நான் இப்போது ஷேர் செய்துவிட்டதால் திரிஷா இதற்கு கோபப்பட மாட்டார் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.
வெளியானது 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன் நேம்' ( One Name ) ஆடியோ ட்ராக்

நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் 2023-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றுருந்துச்சு.
இந்த நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வரும் சூழலில், படத்தின் 'ஒன் நேம்' ( One Name ) ஆடியோ ட்ராக் தற்போது வெளியாகிருக்கிறது. ஏற்கனவே, 'ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகும்னு அறிவிச்ச செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஆடியோ ட்ராக் ரசிகர்களின் கவனத்தை வெகுவா ஈர்த்து வருதுனே சொல்லலாம்.
அன்பே டயானா படத்தின் புதிய பாடல்

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் 'அன்பே டயானா' திரைப்படத்தில் இருந்து 'மச்சான் மாட்டிக்கிட்டான்' பாடல் வெளியாகிருக்கிறது. இந்தப் படத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்காங்க.
அதேமாதிரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜாவும் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க. அதுமட்டுமல்லாமல் இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்காங்க.
சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு உருவாகிருக்கும் இந்த படம் வருகிற ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது. பாரி இளவழகன் 'ஜமா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
OTT-க்கு வரும் 'பரிமளா & கோ'

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன், அனந்திகா உள்ளிட்டோர் நடித்த 'பரிமளா & கோ' படம் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியாகிருந்துச்சு.
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சுற்றி நடைபெறும் கொலை மற்றும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுருந்துச்சு. இந்த நிலையில் படத்தின் OTT வெளியிட்டு தகவல் தற்போது வெளியாகிருக்கிறது. அதன் படி, 'பரிமளா & கோ' படம் வருகிற ஜூலை 10-ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகும்னு சொல்றாங்க.
'டெலிவரி பாய்' டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி

அறிமுக இயக்குநர் நானி இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கும் 'டெலிவரி பாய்' படத்தின் டீசரை விஜய் சேதுபதி தனது X-தள பக்கத்தில் வெளியிட்டுருக்காரு.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துருக்காங்க. மேலும், ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்காங்க.
படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இந்த மாத இறுதியில் படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருக்காங்க. அறிமுக இயக்குநர் நானி, சுசீந்திரனின் உதவி இயக்குனரான பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
14 நாட்களில் இத்தனை கோடியா?

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியான எங்கள் தங்கம் திரைப்படத்தில் சமந்தா, கெளதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிச்சிருந்தாங்க. இந்த படம் என்னதான் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும், வசூலில் தொடர்ந்து அதிகரித்து வருதுனே சொல்லலாம்.
அதன் படி, படம் வெளியான 14 நாட்களில் உலகளவில் ரூ. 97 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கு. அதே மாதிரி, வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும்னு சொல்றாங்க.
விசில் அடித்து ரசித்த ரஜினி

"தர்மன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில், ரஜினிகாந்த் சார் காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் கம்பீரமாக நடந்து செல்லும் காட்சியை எடுத்தோம்.. அப்போ அந்த காட்சியை மானிட்டரில் பார்த்த ரஜினி சார், படப்பிடிப்பு தளத்திலேயே விசில் அடித்து ரசித்தாரு.
அதுமட்டுமல்லாமல் ரஜினி சார் அந்த காட்சியை பார்த்ததும், "அசத்தலான swag" என்று கூறியதாக படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். மேலும், "தர்மன் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான மாஸ் அனுபவமாக இருக்கும்" என்று அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.