Also Watch
Read this
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர்-2 திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆடியோ பாடல் வெளியீடு
'One name to rule the game' ஆடியோ பாடல் யூடியூப், SPOTIFY உள்ளிட்ட தளங்களில் வெளியாகி உள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த மாதம் திரைக்கு வரும் ஜனநாயகன்?
நடிகரும், முதலமைச்சருமான விஜய் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தனர். தொடர் இழுபறியில் இருந்த ஜனநாயகனின் சென்சார் சான்று பிரச்சனை வரும் வாரத்திற்குள் முடிந்து விடும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதமே இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

50 நாட்களை நிறைவு செய்துள்ள கருப்பு
ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா கூட்டணியில் வெளியான கருப்பு திரைப்படம் 50 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அமோக ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரின் ஆதரவால் கருப்பு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சூர்யாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நம்பிக்கை, உணர்வு மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கதை கருப்பு எனவும் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Delivery Boy திரைப்படத்தின் டீசர்
நானி இயக்கத்தில் லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள Delivery Boy திரைப்படத்தின் டீஸர் வெளியானது. போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ்
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெய்ராம், ஊர்வசி, மிஷ்கின் நடிப்பில் வெளியான PARIMALA AND CO திரைப்படம் வரும் 10ஆம் தேதி ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொலை சம்பவத்தை சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ் காட்சிகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான PARIMALA AND CO, 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

துரந்தர் இயக்குநருடன் இணையும் நடிகர் பிரபாஸ்
துரந்தர் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஆதித்யா தார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாகவும், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் தற்போது கல்கி-2 மற்றும் SPIRIT ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதித்யா தார் மற்றும் பிரபாஸ் ஆகிய இருவருக்குமே இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், PAN INDIA திரைப்படமாக உருவாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

11 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம்
நடிகர் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்து கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.