news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரஜினியை ஓவர்டேக் செய்வாரா முதல்வர் விஜய்..?
tv

Also Watch

ரஜினியை ஓவர்டேக் செய்வாரா முதல்வர் விஜய்..?

ஜனநாயகன்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CM Vijay

ஜனநாயகனில் இருக்கும் சர்ப்ரைஸ்!

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் நடிச்சு இருக்கற ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீசாகுது. ஹெச். வினோத் இயக்கத்துல உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்துக்கு பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்ல நடிச்சு இருக்காங்க. படத்துக்கு அனிருத் இசையமைச்சு இருக்கற நிலையில், ஜனநாயகன் விஜயின் கடைசி படம்னு அறிவிக்கப்பட்டிருக்கு.

ஏற்கெனவே ஜனவரியில் ரிலீசாக இருந்த ஜனநாயகன் பல காரணங்களால் ரிலீசாகாமல் தள்ளிப்போனது. தற்போது சென்சார் போர்டின் ஏ சான்றிதழுடன் ஜனநாயகன் திரைக்கு வருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செஞ்சிட்டு வறாங்க. இந்த நிலையில, ஜனநாயகன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கூலி படத்தின் முதல்நாள் வசூலான 151 கோடி ரூபாயை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கு. இதுக்கு முன்னால விஜயின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் ரிலீசான முதல் நாளில் 149 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்திருந்தது.

பகவந்த் கேசரி படத்தை பார்த்த முதல்வர் விஜயின் ரியாக்ஷன்!


மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே முதலமைச்சர் விஜயின் ஜனநயாகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீசாகிறது. இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிச்சி இருந்த பகவந்த் கேசரி படத்தோட ரீமேக் என சொல்லப்படும் நிலையில, அந்த படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி, விஜய் பற்றி பேசி இருக்காரு.

ஐதரபாத்தில் கோட் படத்தின் ஷூட்டிங்கின்போது, தன்னை பார்க்க வேண்டும்னு விஜய் அழைத்ததாக சொல்லி இருக்குற அனில் ரவிபுடி அதை கேட்டதும் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்த அனில் ரவிபுடி, விஜயை பார்க்க ஓடி போயிருக்காரு.

கேரவன் வேனுக்குள் 15 நிமிடங்கள் விஜயுடன் அந்த சந்திப்பு நடந்ததாகவும், தனது பகவந்த் கேசரி படத்தை பார்த்த விஜய், அதை நல்லா எடுத்திருப்பதாக கூறி பாராட்டியதாகவும், அதுக்காகதான் அழைத்தேன்னு விஜயே சொன்னதாக அனில் ரவிபுடி பேட்டி ஒண்ணுல சொல்லி இருக்காரு.

கதை ஹெவியா இருக்குன்னு Reject பண்ண CM விஜய்


கதை ரொம்ப ஹெவியா இருக்குன்னு சொல்லி ஜனநாயகன் கதையை முதலமைச்சர் விஜய் மாற்றியதா, படத்தோட இயக்குநர் ஹெச். வினோத் சொல்லி இருக்காரு. முதலமைச்சர் விஜயின் கடைசி படத்தை இயக்கனும்னு ஆசப்பட்டு அதுக்காக ஒரு கதையை எழுதி வினோத எடுத்துட்டுப் போனதாவும், ஆனா, அந்த கதை ஹெவியாக இருக்குன்னு சொன்ன விஜய், பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்யலாம்னு சொன்னதா சொல்லியிருக்காரு.

இது மட்டுமில்லாம, தமிழ் ரசிகர்களின் பல்ஸ்க்கு ஏத்த மாதிரி பகவந்த் கேசரி படத்தோட 60 சதவீத காட்சிகளை மட்டும் ரீமேக் செய்ததாகவும், மற்ற சீன்கள் எல்லாம் விஜயின் ஐடியா படி மேக்கிங் செஞ்சி இருக்கறதாகவும் சொல்லி இருக்காரு.

Related Link
‘ஜனநாயகன்’ விஜய் வென்ற கதை

‘ஜனநாயகன்’ விஜய் வென்ற கதை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved