news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

திருத்துறைப்பூண்டி, திருவாரூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லாட்டரி விற்பனை

லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது : 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட சோதனையில்
ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 700 பணம் மற்றும் 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சேகர் (63), த/பெ. மூர்த்தி, தட்டார தெரு, திருத்துறைப்பூண்டி என்பவரை திருவாரூர் சிறப்பு எஸ்.ஐ. கார்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் சேகர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சட்டவிரோத லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா பாங்கல் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (43), த/பெ. கலியபெருமாள் மற்றும் பக்கிரிசாமி (60), த/பெ. பன்னீர்செல்வம் ஆகியோரும் பிடிபட்டனர்.

போலீசார் 160 லாட்டரி சீட்டுகள் (தங்கம் – 80, ரோசா – 80), ரூ.2,43,700 ரொக்கம், 4 செல்போன்கள், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 10 வங்கி பாஸ்புக்குகளை பறிமுதல் செய்து, மூவரையும்
திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

1
1 hr 44 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved