news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு குவாட்டர் 300 ரூபாயா?
tv

Also Watch

ஒரு குவாட்டர் 300 ரூபாயா?

நாமக்கல்

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nmk 3

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ராசிபுரத்தில் பல பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள பெரியசாமி டீக்கடை அருகே, வங்கி மற்றும் பேக்கரி குடியிருப்புக்கு மத்தியில் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதேபோல், நாமகிப்பேட்டை, புதுப்பட்டி, மங்களபுரம், திம்மநாய்க்கன்பட்டி, முள்ளுகுறிச்சி, புதுசத்திரம், புதுப்பாளையம் பகுதிகளிலும் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்கிறது.

டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மதுபானங்களை வாங்க முடியாத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.150 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், மதுக்கடையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்படும் மதுபாட்டில் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் இந்த மதுபாட்டில்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டு ,விடுமுறை நாட்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமுதனனின் குடும்பத்தை பார்த்து நேரில் ஆறுதல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved