Also Watch
Read this
By: Web Team

ஆந்திராவிலிருந்து சரக்கு வேனில் கடத்தப்பட்டு வந்த 2 கோடி மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்துக்குள் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து காரனோடை சுங்கச்சாவடி சுற்றுவட்டார பகுதிகளில், சென்னை மண்டல போதைபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை மேற்கொண்டதில் சரக்கு வேனில் ரகசியமாக அறை அமைத்து கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலி நம்பர் பிளேட், போலி Fasttag பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved