news-tamil-logo

3/22/2026, 3:11:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 35 சவரன் நகைகள் இருந்த பையை தவற விட்ட பெண்
tv

Also Watch

tv

Read this

35 சவரன் நகைகள் இருந்த பையை தவற விட்ட பெண்

தூத்துக்குடி

Posted on: Feb 04, 2026 01:12 PM

5

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister geetha jeevan
  • ரயில்வே நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த 35 பவுன் தங்க நகைகள், தூய்மை பணியாளர் நகையை மீட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க
    உதவிய தூய்மை பணியாளர் மீனாட்சியை வாழ்த்தி ரொக்க பரிசு வழங்கிய அமைச்சர்.

  • தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி ராமலட்சுமி என்ற பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுள்ளார் அப்போது அவரது கட்டைப்பையில் வைத்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 35 பவுன் தங்க நகையை தூத்துக்குடி ரயில்வே நடைமேடையில் தவற விட்டுச் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் அதிகாலை தூய்மை பணிக்காக அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி மீனாட்சி என்ற தூய்மை பணியாளர் நகையை கண்டெடுத்துள்ளார் உடனடியாக அந்த நகையை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து நகையை தவறவிட்ட ராமலட்சுமிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு வரவழைத்து தவறவிட்ட 35 பவுன் நகையையும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது .

    47 லட்ச ரூபாய் நகையை கள்ளம் கபடம் இல்லாமல் உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ரொக்க பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நல மாநகர துணை அமைப்பாளர் கருப்பசாமி, தூய்மை பணியாளர் மீனாட்சி, போல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Link
எம்எல்ஏ தாக்குதல் - விஜய் கண்டனம்

எம்எல்ஏ தாக்குதல் - விஜய் கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்..!மாறியது தலைப்பு செய்தி

1
13 mins agoshare
tvk vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved