news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 96.40 லட்சம் பயணிகள் பயணம்
tv

Also Watch

tv

Read this

96.40 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை

19

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மெட்ரோ 2

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 96,40,993 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3,99,503 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம்
அதிகபட்சமாக 20.02.2026 அன்று 3,99,503 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 49,11,328 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,121 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 46,91,544 பயணிகள் (Single journey Paper QR /Token 19,10,265; Online QR – 1,26,618; Static QR 2,11,188; Whatsapp - 4,51,491; Paytm 3,27,534; ONDC – 11,47,636; PhonePe – 2,70,088; CMRL Mobile App 64,649; Chennai One App – 1,59,134; Event QR - 22,941) உள்ளிட்ட பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பயணிகளுக்கு நன்றி
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது. மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.


Related Link
மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி

மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன்

1
18 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved