news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி
tv

Also Watch

மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி

சென்னை

118

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
chn

மெக்கா ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி சவுதி மெக்காவிற்கு சென்று உள்ளார். போர் சூழல் காரணமாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்கா சென்றுள்ள தலைமை ஹாஜி
தமிழ்நாடு அரசின் புதிய தலைமை ஹாஜியாக (Chief Kazi) மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் அக்டோபர் 17, 2025 முதல் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இவர் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் அதேபோல புனித பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக சவுதியிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு தலைமை ஹாஜி மீண்டும் தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார்.

பத்திரமாக பாதுகாப்பாக உள்ளார்
தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் உள்ளதாகவும், அவரிடம் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நலம் விசாரித்ததாக தகவல்
இதனிடையே அவரை தொடர்பு கொண்டு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நலம் விசாரித்ததாகவும், சவுதி மெக்காவில் சிக்கியுள்ள தலைமை ஹாஜியை விமான சேவை தொடங்கியவுடன் பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Link
யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved