news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவோடு இரவாக மாயமான 7 வயது சிறுமி
tv

Also Watch

இரவோடு இரவாக மாயமான 7 வயது சிறுமி

தாயிடம் விசாரணை, பின்னணியில் யார்?

39

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விழுப்புரம் அருகே பிறந்தநாள் கொண்டாடிய இரவிலேயே 7 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்களாக தீவிரமாக தேடியும் சிறுமியை குறித்த எவ்வித துப்பும் கிடைக்காததால், 5 தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமம், குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதியினர். கூலி தொழிலாளர்களான இவர்களது 7 வயது மகள் ஹேமலதா. அரசு தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, கடந்த 11ம் தேதி பிறந்தநாள் என்பதால், அன்று இரவு மகளுக்கு புத்தாடை அணிவித்து, கேக் வெட்டி பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர் பெற்றோர்.

பின்னர், வழக்கம்போல், குடும்பத்தினர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில், மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் ஹேமலதா இல்லாததை கண்டு தாய் பவானி அதிர்ச்சியாகியுள்ளார். வீட்டின் சுற்றுப்புறங்களிலும், அக்கம் பக்கத்திலும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

காவல்துறையில் புகார்
இதனால், பதற்றமடைந்த பெற்றோர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் இறங்கினர்.

சிறுமி காணாமல் போனதாக கூறப்படும் பகுதியில் உள்ள கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் தேடுதல் நடத்தப்பட்டது. ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்களின் உதவியுடனும் சிறுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், 3 நாட்களாகியும் சிறுமியை பற்றி எவ்வித துப்பும் கிடைக்காததால், அவரை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பல்வேறு கோணங்களில்...
மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் பதிவான செல்போன் தகவல்களையும் அடிப்படையாக கொண்டு போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடைக்கக்கூடிய தடயங்கள், சிறுமி காணாமல் போன நேரத்தில் அப்பகுதியில் நடமாடியவர்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமியை யாரேனும் கண்காணித்து, திட்டமிட்டு கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சிறுமியின் தாயிடம் விசாரணை
இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் தாய் பவானியிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ச்சியுடன் உறங்க சென்ற சிறுமி, அதிகாலையில் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 3வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் தகவல்கள் மற்றும் கிடைக்கக்கூடிய பிற தடயங்களை ஆய்வு செய்து வரும் போலீஸார், சிறுமி எங்கு சென்றார், என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு தேடி வருகின்றனர்.

7 வயது சிறுமி ஹேமலதா பத்திரமாக மீட்கப்படுவாரா? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது என்ன? என்ற கேள்விகளுக்கு, காவல்துறையின் அடுத்தகட்ட விசாரணையில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
மசூதியில் புகுந்து அடித்து நொறுக்கி அட்டகாசம் 
காவலர்களின் காதுகுளிர காதல் பாடல்கள்

மசூதியில் புகுந்து அடித்து நொறுக்கி அட்டகாசம் காவலர்களின் காதுகுளிர காதல் பாடல்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved