news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மசூதியில் புகுந்து அடித்து நொறுக்கி அட்டகாசம் காவலர்களின் காதுகுளிர காதல் பாடல்கள்
tv

Also Watch

மசூதியில் புகுந்து அடித்து நொறுக்கி அட்டகாசம் காவலர்களின் காதுகுளிர காதல் பாடல்கள்

படுத்தி எடுத்த கஞ்சா போதை ஆசாமி

54

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, வடபழனியில் உள்ள ஒரு மசூதியில் கஞ்சா போதையில் உள்ளே புகுந்த ஒருவர், அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி அராஜத்தில் ஈடுபட்டுள்ளார்.

மடக்கி பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்குள் படாதபாடுபட்ட காவலர்களின் காதுகளை குளுமையாக்கும் வகையில் பல காதல் பாடல்களை வாரி வழங்கிய போதை நபருக்கு கைகளில் கட்டுப்போடுவதற்குள் மொத்த சக்தியையுமே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரு புறம் சிரிப்பு வந்தாலும்...
போதையில், காதல் பாடல்களை எடுத்துவிட்டவரை பார்த்து ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் புனிதமான மசூதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதே பலரது கருத்து.

சென்னை வடபழனி கங்கையம்மன் தெருவில் உள்ள மசூதிக்கு வழக்கம்போல அதிகாலை 5 மணிக்குமேல் தொழுகைக்காக இஸ்லாமியர்கள் வரத்தொடங்கினர். ஆனால், மசூதி கிடந்த கோலத்தையும், அதன் உள்ளே நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்மநபரையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

கஞ்சா போதையின் உச்சத்தில், மசூதியின் பிரதான நுழைவாயிலை உடைத்து உள்ளே புகுந்த அந்த மர்மநபர் புனித குர்ஆன், வைஃபை, நாற்காலிகள், சிசிடிவி கேமராக்கள், ஜன்னல், மைக் செட் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி இருந்தார்.

விரைந்து வந்த காவலர்கள்
இதனிடையே, கண்ணாடி கதவுகளை ஆவேசமாக உடைத்து தனது வீரத்தை காட்டிய மர்மநபரின் கைகளில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் துள்ளிய மர்மநபரை கண்டு, தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள் ஒருபுறம் நடுங்கிக் கொண்டிருக்க மறுபுறம் காவலர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

அதேபோல், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் ஊழியர்களும் வந்தனர். ஆனால், தனி ஒரு ஆளாக அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்த மர்மநபரை காவல் வாகனத்திற்குள் ஏற்றுவதற்குள் போலீசார் படாதபாடுபட்டனர்.

காதல் பாடல்களைப் பாடி...
அறந்தாங்கி என்ற ஊர் பெயரை கூறிய போதை நபர், யாராவது எதிர்த்துப்பாருங்கள் TVK தெரியுமா TVK தளபதி வெற்றிக்கழகம் என வீர முழக்கமிட்டார். அடுத்து, வீரத்தில் இருந்து காதல் மோடுக்கு வந்த அந்த நபர் இசைஞானியின் நான் தேடும் செவ்வந்திப்பூவிது பாடலில் உள்ள வரிகளை பாடி நடனமாடினார்.

தொடர்ந்து, ரோஜாப்பூந்தோட்டம் காதல் வாசம் என மற்றொரு காதல் பாடலுக்கு வந்த அவர் தான் ஜாஸ்மினை கல்யாணம் பண்ணப் போவதாகவும், என் மனைவி காக்காவிற்கு 2 பிள்ளைகள் கொடுப்பேன், அவள் எங்கிருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என வாய்க்கு வந்தபடி உளற ஆரம்பித்தார்.

வம்புக்கு இழுத்து...
இடையிடையே துப்பிக்கொண்டே இருந்த அந்த நபரை துப்ப வேண்டாம், அருகில் உள்ளவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள் என காவலர்கள் கண்டித்தனர்.

ரத்தம் ஊற்றும்போது துப்பாமல் இருக்க முடியுமா? ரத்தவாடையில் எப்படி தூங்குகிறார்கள்? அதையும்மீறி தூங்கினால் அவர்கள் பிணம், அவர்கள் தூக்கத்தை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும் என ஆவேசமான போதை நபர் நீங்களும் பிணம்தான் என காவலர்களையும் வம்பிக்கு இழுத்தார்.

அன்பே என் அன்பே...
மசூதியில் இருந்து அவரை அழைத்துச்சென்றால் போதும் என்பதற்காக பொறுமையாய் நின்று கொண்டிருந்த காவலர்களிடம், என் கேரக்டரை பாக்குறீங்களா என சீண்டிய போதை நபர், தப்பி ஓட முயல கேட் சாத்தப்பட்டது. ஆனால், காம்பவுண்ட் சுவரில் ஏறி அமர்ந்து மீண்டும் லவ் சாங்குக்கு தாவிய அவர், அன்பே என் அன்பே உன் விழி பார்க்க என்ற பாடலையும், சாவே வந்தாலும் நான் சாகமாட்டேண்டி என்ற பாடலையும் முணுமுணுத்தார்.

இத்தனைக்கும் மத்தியில் ஒருவழியாக, போதை நபரை சுற்றி வளைத்து கயிறால் மடக்கி காயத்திற்கு கட்டுப்போட்டுக் கொண்டிருக்க, அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவில் வலம் வருவோம் என கூலாக பாட்டுப்பாடினார் போதை நபர். அடுத்து, உக்கிரமான அவர் காவலர்களை எட்டி உதைத்து தாக்க பாய்ந்தார்.

அதையும் பொறுத்துக்கொண்ட காவலர்கள் ’கட்டுப்போட்றா, அடுத்து பாட்றா,’ என நிலையை சமாளித்து கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் போதை நபர். மசூதியை சூறையாடிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிவாசலில் புகுந்து தாக்கிய நபர் கைது
இந்தநிலையில், பள்ளிவாசலில் அதிகாலையில் புகுந்து கதவு, மைக் செட், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்களை உடைத்து நொறுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட சரவணன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், கஞ்சா போதையில் பொருட்களை உடைக்கும்போது ரத்த காயம் ஏற்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Link
25 ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் 
சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி

25 ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved