news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் குட்டி யானை
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரியும் குட்டி யானை

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குட்டி யானைect

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அய்யூர், மரக்கட்டா, நொகனூர், தளி, ஜவளகிரி வனப்பகுதிகளில் அதிக அளவு காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் கூட்டத்தில் தாயை பிரிந்த ஒன்றரை வயது குட்டி யானை ஒன்று சமீப காலமாக வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சுற்றித்திரிந்து வருகிறது.

இதை குட்டி யானை தேன்கனிக்கோட்டை கவி நரசிம்மர் கோயில் அருகே உள்ள தனியார் விவசாயம் பண்ணைக்குள் நுழைந்துள்ளது அங்கிருந்தவர்கள் குட்டி யானையைப் பார்த்து அச்சமடைந்தனர் அதே நேரத்தில் குட்டி யானை யாரையும் தொந்தரவு செய்யாததால் பொதுமக்கள் அந்த குட்டியானைக்கு கரும்புகள் மற்றும் வாழை பழங்கள் உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்கினர்.


குட்டி யானையும் அந்த பகுதியில் நீண்ட நேரம் உண்டு பொதுமக்களிடம் உணவுப் பொருட்களை வாங்கி தின்றது இந்த குட்டி யானை யாரையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதால் அதனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

வனத்துறையினர் குட்டி யானையை தாயுடன் சேர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் குட்டி யானை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் சுற்றி வருகிறது.

Related Link
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 17 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau