Also Watch
Read this
By: Web Team

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிசுவின் பாலினம் கண்டறிந்த வழக்கில், ஒரு பெண் உள்ளிட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாலினம் கண்டறிவதற்கு, ஆந்திராவை சேர்ந்த கிளாரா மேனகா தேவி, பிரதீப், அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் உள்ளிட்ட 5 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கி இருந்த கிளாரா மேனகா தேவி மற்றும் பிரதீப் ஆகியோரை, கடந்த மாதம் 17ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved