Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் பள்ளி வேனின் டயரில் சிக்கிய 2 வயது குழந்தை தாயின் கண் முன்னே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நாபளூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவர் தனது மூத்த மகனை பள்ளி வேனில் ஏற்றி விட சென்றபோது, 2 வயது இளைய மகனையும் தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது, வேனின்அடியில் குழந்தை சென்றதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved