news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews “தவறுதலாக நடந்தது”
tv

Also Watch

“தவறுதலாக நடந்தது”

சர்ச்சை பேச்சும் விளக்கமும்

53

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதல்வர் கனவுத் திட்டத்துடன், நடிகை நயன்தாராவை சம்மந்தப்படுத்தி, அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையான நிலையில், தவறுதலாக நடந்தது என்று, அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.

என்டிஏ கூட்டணி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து போனதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கூறி, திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி NDA சார்பில் இன்று மார்ச் 17ஆம் தேதி, மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையிலும், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையிலும், தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம்...
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது;
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். ஆனால், முதலமைச்சர் ஒரு படி மேலே போய் கனவைச் சொல்லுங்கள், நிறைவேற்றுகிறேன் என்கிறார்.
எனக்கு நயன்தாரா வேண்டும், நயன்தாராவை திருமணம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னால் அதை நிறைவேற்றுவாரா?
இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.

சர்ச்சையான பேச்சு
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில், சி.வி.சண்முகம் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
“நயன்தாரா என்ற பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். எந்த தவறான நோக்கமும் இல்லாமல், தவறுதலாக வார்த்தை பயன்படுத்தப்பட்டது” என்று சண்முகம் விளக்கம் தெரிவித்து உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved