Also Watch
Read this
Posted on: Nov 21, 2025 02:10 PM
By: Web Team

மதுரை திருமங்கலம் அருகே தீப்பிடித்து எரிந்த தனியார் பள்ளி பேருந்தில் இருந்து, ஓட்டுநரும், உதவியாளரும் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து, திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநரும், உதவியாளரும் விரைந்து செயல்பட்டு, பேருந்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved