news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பல ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி
tv

Also Watch

tv

Read this

பல ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி

பள்ளிபாளையம், நாமக்கல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பள்ளிபாளையம், நாமக்கல்

உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி:

பலமுறை பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் பள்ளியை மூடாமல் அரசாங்கத்தை ஏமாற்றி பள்ளியை நடத்தி வந்த பள்ளி நிர்வாகம் சரியான முறையில் பள்ளி நிர்வாகம் இயங்காதால் பள்ளியை காலி செய்யக்கோரி பள்ளி இடத்தின் உரிமையாளர் அளித்த புகார்.

லைசன்ஸ் இல்லாமல் ஓட்டு கட்டிடத்தில் தனியார் பள்ளி இயங்குவது குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் உத்தரவின் பெயரில் பள்ளி செயல்படக்கூடாது என்று அறிவிப்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட்டு பகுதியில் கோல்டன் நர்சரி பிரைமரி ஸ்கூல் இயங்கி வந்தது இந்த பள்ளிக்கு உரிமம் இல்லாதது குறித்து நேற்றைய தினம் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்த நிலையில் இதனை செய்தியாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது..


இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி தமிழ்நாடு தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டம் 2023 படி உரிய துவக்க அனுமதி இன்றி செயல்பட்டு வந்த இப்பள்ளி நில உரிமை சார்பாக பிரச்சனைகளுடன் பாதுகாப்பு இல்லாத ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாலும்.

எனவே மாணவர்களின் பாதுகாப்பிற்கு உறுதியற்ற தன்மை ஏற்படுவதால் 2026 முதல் 2027 கல்வி ஆண்டு முதல் எக்காரணம் கொண்டும் பள்ளி செயல்படக் கூடாது எனவும் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்த ஒரு வகுப்பிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு மாறாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு பள்ளி செயல்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க நேரிடும் என நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Link
திடீரென வீசிய சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர்

திடீரென வீசிய சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

2
3 hrs 31 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved