Also Watch
Read this
By: Manigandan Raja

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள பனவிளை பகுதியை சேர்ந்த இளைஞர் அஜீஸ்ராஜ் நேற்று காலை குளச்சல் பகுதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில்
திங்கள்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார் இருசக்கர வாகனமானது உடையார்விளை பகுதியில் சென்ற போது சாலையோரம் இடது புறம் நின்ற காரை டிரைவர் திடீரென
சாலையில் திருப்ப முயன்ற போது இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் மீது மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அஜீஸ்ராஜ் சாலையில் விழுந்து படுகாயமடைந்த நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து குளச்சல் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளும் வெளியாகியுள்ளது.