Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆடுகள் மீது காரை மோதிவிட்டு தப்பி சென்ற நபரை, போலீஸார் மற்றும் இளைஞர்கள் துரத்தி சென்று பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோரணம் பகுதியில் சாலையோரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் ஒன்று அதன் மீது மோதியது.
அப்போது, அங்கிருந்து காருடன் தப்பிய இளைஞரை ,சாலையின் குறுக்கே பேரிகார்டு அமைத்து போலீஸார் பிடிக்க முயன்றனர்.
போலீஸார் மற்றும் பேரிகார்டு மீதும் காரை மோதிவிட்டு தப்பிய இளைஞரை, போலீஸார் ஒருவரும் , அங்குள்ள இளைஞர்களும் பைக்கில் சுமார் 20 நிமிடம் துரத்தி சென்ற போது,
ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இதனையடுத்து காருக்குள் இருந்த இளைஞரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved