Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டி ஊராட்சியின் கிராம சபா கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாதேவி காளியப்பனுர் பகுதியில் இன்று சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்றது.
இதில் தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினர்
அந்த நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக விண்ணப்பித்தால் நில அளவீட்டாளர் முதல் அதிகாரிகள் வரை ரூபாய் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக கிராம சபைக் கூட்டத்தில் குற்றம்சாட்டி பேசினர்.
இதனை அதிகாரிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் இல்லையெனில் இனி வரும் காலங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் என கிராமசபை கூட்டத்தில் தெரிவித்தனர் கிராமசபா கூட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்து பேசியதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved