Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடம் சிதிலமடைந்தும், முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
குட்லாடம்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காவும், 10 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடமும் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.
இவைகளை பூட்டியே வைத்திருப்பதால், உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்தும், வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டியும் கிடக்கின்றன.
மேலும் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மைய விளையாட்டு திடலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதாக சமத்துவபுரம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved