Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உடல்நலம் குன்றி காணப்பட்ட யானையை, வனத்துறையினர் மருத்துவக் குழு உதவியுடன் மீட்டு சிகிச்சை அளித்து, கண்காணித்து வருகின்றனர். 35 வயதுடைய யானை கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சுற்றித் திரிந்து தனியார் நிலத்தில் படுத்திருந்த யானைக்கு, வனக் கால்நடை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரானதும் யானையை மீட்டு கண்காணித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved