Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பொதுக் கூட்டத்திற்கு சிறப்பாக திட்டமிட்டு பாதுகாப்பு வழங்கிய SSP இஷா சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு
அம்மாநில உள்துறை சார்பில் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.! கடந்த 9-ந் தேதி புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.தவெக தலைவர் விஜய் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கியூ ஆர் கோடு மூலமாக தொண்டர்களை அனுமதித்தது தொடங்கி, பாதுகாப்புவழங்கியது வரை புதுச்சேரி போலீஸ் சுற்றி சுழன்று, எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கவனமாக கையாண்டது.! இந்த நிலையில், விஜய்யின் பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட SSP இஷா சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved