Also Watch
Read this
By: Fyrose Banu

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் ஆடிப்பூர பஞ்சமி முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு வளையல் அணி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஸ்ரீ வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீ வராகி அம்மனுக்கு பல வண்ணங்களில் வளையல்கள், பல வகையான பழங்கள் மற்றும் இனிப்பு கார வகைகள் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுடன் அம்மனுக்கு கொண்டு வந்தனர். ஸ்ரீ வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.


இதில் ஸ்ரீ வராகி அம்மன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved