Also Watch
Read this
By: Web Team

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை, சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
வழக்கை ரத்து செய்யும்படி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பதினைந்து லட்சம் ரூபாயை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், பதினைந்து லட்சம் ரூபாயை தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved