news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
tv

Also Watch

முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

அம்மன் வீதி உலா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவிழா கோலாகலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புது பாலப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினந்தோறும் பாரதம் படித்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா, கழுமரம் ஏறுதல், காளி கோட்டை இடித்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.


தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திரளான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவில் புது பாலப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Link
கருங்குட்டு கருப்பசாமி கோவில் அன்னதான விழா

கருங்குட்டு கருப்பசாமி கோவில் அன்னதான விழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை எந்தெந்த துறைகளுக்கு மானிய கோரிக்கை?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved