Also Watch
Read this
By: Web Team

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
சென்னையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாமல் செயல்பட்டதற்காக சென்னை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜராகினார்.
அப்போது அவரது சார்பில் வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாக ஆணையர் கூறியதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved