Also Watch
Read this
By: Manigandan Raja

ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் :
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்வதற்காக நேற்று மாலை முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத் தொடஙகினர்.
சித்ரா பௌர்ணமி இன்று இரவு 09.51 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.07 வரை உள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கிரிவலம் முடித்த பக்தர்கள் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை காட்பாடி மார்க்கமாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையத்தில் அதிக அளவில் காணப்பட்டனர்.
ரயில்வே நிர்வாகம் சார்பில் சித்ரா பௌர்ணமிக்கு கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படி இருந்தும் கிரிவலம் முடித்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் ரயிலின் முன் பெட்டியில் இருக்கைகள் காலியாக இருந்த நிலையிலும் பயணிகள் நிற்கும் இடத்தில் வரும் பெட்டிகளில் ரயிலில் இருந்து இறங்குவதற்கு கூட பயணிகளை விடாமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதால் திரு சலசலப்பு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
ரயில் நிலையத்தில் பௌர்ணமி தினங்களில் ரயில்வே போலீசார் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு இருப்பதால் உடனுக்குடன் பயணிகளை ஒழுங்குப்படுத்தி ரயிலில் ஏற்றி அனுப்புகின்றனர்.