news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 'முதலமைச்சர் ஆளுநர் மாளிகையை அதிர வைப்பார்'
tv

Also Watch

'முதலமைச்சர் ஆளுநர் மாளிகையை அதிர வைப்பார்'

மணப்பாறை, திருச்சி

42

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Anbil magesh meeting

ஆளுநர் மாளிகையை அதிர வைப்பார் : 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தி.மு.க சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி
கலந்து கொண்டு பேசினார்.

கலைஞருக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு கண்ணில் ஏற்பட்ட பாதிப்பிற்கு பிறகு அவரிடம் ஒரு கண் இப்படி ஆனதே என்று கேட்டதற்கு ஒரு கண் போனால் என்ன என்னுடன் நல்லக்கண்ணு இருக்கிறார் என்று பொதுவுடமை தலைவரை பற்றி சொன்னது நினைவிருக்கிறது. நல்லக்கண்ணு இந்த நாட்டிற்கு, மண்ணிற்கு, இந்தியாவிற்கு உழைத்தவர்.

அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம். முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் விதமான இன்னும் 60 நாள் தான் ஒரு சிறிய இடைவெளி தான். முடிந்ததுக்கு அப்புறம் மே மாதம் 7 ம் தேதி அதே ஆளுனர் மாளிகைக்கு செல்வோம். ஆளுனர் எங்களை பார்க்க முடியாமல் உட்காந்திருப்பார்.

என்னடா அதே குரூப் மறுபடியும் வந்து விட்டார்களே என்ன பேசுறதுனே தெரியாம ஆளுனர் ஒருபுறம் நிற்பார். நம் தலைவர் மறுபுறும் நிற்பார். மு.க.ஸ்டாலின் என்று சொல்லி ஆளுனர்
நிற்பார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று ஆளுனர் மாளிகையை அதிர வைப்பார். நம் கொள்கை எதிரியை பதற வைப்பார் அது நடக்கும் என்று கூறினார். கூட்டத்தில் எம்.பி, கவிஞர் சல்மா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஹெச்.மனோஜ்பாண்டியன், தலைமைகழக பேச்சாளர் நாகநந்தினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Link
சென்னையில் த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

சென்னையில் த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved