news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையில் த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
tv

Also Watch

tv

Read this

சென்னையில் த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

திருவான்மியூர், சென்னை

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN TVK Meeting

த.வெ.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம் : 

இந்த கூட்டத்தில் பொதுசெயலாளர் என்.ஆனந்த், லயோலா மணி,வழக்கறிஞர் சத்திய குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக மறைந்த தோழர் நல்லகண்ணுவிற்கு என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி வீரவணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் என்.ஆனந்திற்கு செங்கோல் வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் : 

நமக்கு இருப்பது இன்னும் 50 நாட்கள் மட்டும்தான். மே மாதத்தில் விஜய் முதலமைச்சர் ஆவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரை 2 கட்சியினர் தான் மாறி மாறி வந்தார்கள். அதை தாண்டி ஒரு புதிய கட்சியை தேடிக்கொண்டு இருக்கும்போது தான் நம் தளபதி வந்தார்.

விருப்பமனு அறிவித்த ஒன்றரை மணி நேரத்தில் 10000 மனு வாங்கிய ஒரே கட்சி தவெக தான். அதிலும் பெண்கள் முதலில் எங்களுக்கு கொடுங்கள் என்று வாங்கினர்.

இந்த மாவட்ட செயலாளர் முதலில் ஆட்டோ ஓட்டி வந்தவர், இன்று மாவட்ட செயலாளராக இருக்கிறார். தளபதி சொன்னது போல உழைத்தவர்களுக்கு மட்டும் தான் பொறுப்பு. நான்
முதலில் சொன்னதுபோலவே 5000,10000 கொடுத்தாலும் 5 ரூபாய் விசில் எல்லாவற்றையும் துரைத்துவிடும்.

நல்லகண்ணு ஐயா இன்று நம்மிடம் இல்லை. நேர்மையான மனிதர் ஒருவர் இருந்தார் என்றால் அது நல்லகண்ணு ஐயா தான். அவரை தோற்கடித்த திமுக தான் இன்று நீலிக்கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறது.

மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடிகிறதோ அதை மட்டும் தான் சொல்லுவார்.தவெக ஆட்சிக்கு வந்தால் இளைஞருக்கு வேலை வாய்ப்பும், பெண்களுக்கு பாதுகாப்பும் இருக்க கூடிய கட்சியாக இருக்கும்.இன்னும் 50, 60 நாட்கள் பயந்தது போலவே இருங்கள், அதன்பின் தளபதி ஆட்சியில் தைரியமாக செல்வோம்.

Related Link
போக்சோவில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட SSI

போக்சோவில் கைதாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட SSI


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திட்டம் எங்களோடது, விளம்பரம் தேடுறது திமுக - இபிஎஸ் விமர்சனம்

5
31 mins agoshare
திருச்சியில் இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved