news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தடையில்லை"
tv

Also Watch

"தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தடையில்லை"

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
High court

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தடையில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு, தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகில் தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், பொது மக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக,உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது;

தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்பதால், தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கத் தடை இல்லை. தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் .

தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடை விதிக்க முடியாது.

இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved