Also Watch
Read this
By: Manigandan Raja

விதிமுறைகளை மீறி பரிசு வழங்கியதாக புகார் :
தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளராக பார்த்திபன் இருந்து வருகிறார். இவர் ரம்ஜான் பண்டிகைக்கு முன்தினம் சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன அதனை ஆவணமாக கொண்ட தேர்தல் அலுவலர்கள், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இஸ்லாமியர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் அலுவலர்கள் புகாரின் பேரில் டவுன் காவல் நிலையத்தினர் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved