news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக மோதல்
tv

Also Watch

tv

Read this

வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக மோதல்

திருப்பத்தூர்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பத்தூர் பணப்பட்டுவாடா

பணம் வழங்குவது தொடர்பாக மோதல் : 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்குட்பட்ட செட்டித்தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சச்சிதானந்தன் ( 35) தமிழக வெற்றி கழகத்தின் நகர மத்திய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் சச்சிதானந்தன் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன்நகர் பகுதியில் இன்று ஓட்டிற்காக பொதுமக்களிடம் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த புதுப்பேட்டைரோடு பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளரும் ஆம்பூர் பொறுப்பாளருமான பழனிவெங்கடேசன் என்பவரின் மகன் நவீன் குமார் மற்றும் அவருடைய தம்பி அருண்குமார் ஆகிய இருவரும் சச்சிதானந்தனிடம் எங்கள் பகுதியில் எங்களுக்கு தெரியாமல் நீங்கள் எப்படி பணம் வழங்கலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

அதனை தொடர்ந்து காயம் ஏற்பட்டு இருவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டாக்டர் திருப்பதி விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தார்.

மேலும் பொது மக்களுக்கு ஓட்டுக்காக பணம் வழங்குவதில் ஒரே கட்சியை சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
கும்பகோணத்தில் 12 கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்

கும்பகோணத்தில் 12 கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026, 82 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

3
12 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved