news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கும்பகோணத்தில் 12 கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

கும்பகோணத்தில் 12 கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்

கும்பகோணம், தஞ்சாவூர்

9

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கும்பகோணம் கருடசேவை

12 கருட சேவை நிகழ்ச்சி கோலாகலம்  : 

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது திதியான அட்சய திருதி அட்சய திருதியாக கொண்டாடப்படுகிறது. இன்று அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய தெருவில்.

சிறப்பாக அமைக்கப்பட்ட பெரிய பந்தலில் சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி, ஆதிவராகபெருமாள், இராமசுவாமி, இராஜகோபாலசுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்மபெருமாள், சீனிவாசப்பெருமாள்,
கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், வேணு கோபாலசுவாமி, பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன், சோலைப்பன் தெரு இராமசாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள் என 12 உறசவர் பெருமாள்கள் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர ஒரே இடத்தில் மிகப்பெரிய பந்தலின் கீழ் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்,

இவர்களுக்கு நேர் எதிரே சிறிய திருவடியான, ஆஞ்சநேயசுவாமி தனி பந்தலில் எழுந்தருளி எதிர் சேவை சாதித்தார் பிரசித்தி பெற்ற இப்பனிரெண்டு கருடசேவையினை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்காண பெண்கள், பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் பயபக்தியுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ தலங்களில் இருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் கருட வாகனத்தில் அட்சய திருதி நன்நாளில் சேவை சாதிப்பது, மிகவும் விசேஷமானது என்பது குறிப்பிடதக்கது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 20042026

இன்றைய ராசி பலன்கள் 20042026





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026, 82 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

3
10 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் வெற்றி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved