news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம்
tv

Also Watch

tv

Read this

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம்

Non Smoking Zone அமைக்க கோரிக்கை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ch corp meeting

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் சதிஷ்குமார், பொது இடங்களில் நின்று கொண்டு புகை பிடிப்பதை தவிர்க்கும் வகையில், Non Smoking Zone ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். கந்தன்சாவடி, பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், புகை பிடிப்பதற்கு தனியாக ஒரு பகுதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்ட அவருக்கு பதில் அளித்த மேயர், தனி நபர்கள் பொது இடங்களில் புகைபிடிப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் அபராதம்;
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு, நவம்பர் 24ஆம் தேதி முதல் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், பொது இடங்களில் அவற்றை அழைத்து செல்லும் போது, கழுத்துப்பட்டை இல்லாமல் அழைத்து சென்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
5 hrs 1 min agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved