news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம்
tv

Also Watch

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம்

திருவாரூர்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
trr paddy damage

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்கள், மழை நீரில் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக, ஆயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன.

கண்கொடுத்த வணிதம், எருக்காட்டூர், நீலனூர், வடக்குசேத்தி உள்ளிட்ட கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலுமாக சாய்ந்து, சேதம் அடைந்து வயலிலேயே முளைக்க துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து. உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பாருங்கள்; "மொத்தமாக போச்சு" விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய மழை | Thiruvarur Paddy Damage | Heavy Rain NewsTamil 24X7

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved