Also Watch
Read this
By: Fyrose Banu

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பறையனேந்தல் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்க அப்பகுதியில் பேரிகார்டுகள் (சாலைத் தடுப்புகள்) அமைக்கப்பட்டன. 
இந்நிலையில், தற்போது அந்த பேரிகார்டுகள் சேதமடைந்து அங்காங்கே சாலை ஓரத்தில் கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் மீண்டும் விபத்துகள் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், நகரிக்காத்தான் பகுதியிலும் அமைக்கப்பட்ட பேரிகார்டுகள் பயன்பாடின்றிச் சாலை ஓரத்தில் வீணாகக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பேரிகார்டுகளைச் சீரமைத்துச் சரியாகப் பொருத்துமாறு அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved