news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்டா கொடுத்த திமுக...
tv

Also Watch

tv

Read this

அண்டா கொடுத்த திமுக...

கோவை

50

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe 2(7)

வால்பாறை பகுதியில் அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று திமுக சார்பாக முன்னாள் நகரச் செயலாளரும் வழக்கறிஞருமான பால்பாண்டி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் த.மா செந்தில்குமார் தலைமையில் இன்று காமராஜர் நகர் பகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணைத் முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் பையில் அண்டா வாக்காளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

டோக்கன் முறையில் பரிசு பொருள்கள் வழங்கல்
இதில் அங்குள்ள வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் முறையில் வழங்கப்பட்ட போது தமிழக முதல்வர் தமிழகத்திற்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000 கோடை வறட்சி காரணமாக 2,000 ரூபாயும் ஆக மொத்தம் 5,000 ரூபாய் தங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்
மேலும் இதனை கருத்தில் கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் உங்களுடைய நண்பர்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களையும் நம்முடைய கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என தாங்களாவே முன்வந்து வாக்காளர்களை அழைத்து ஓட்டு சேகரிக்க வேண்டும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் கட்சி பொறுப்பாளர்கள் வார்டு செயலாளர்கள் கிளைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்தனர்.

Related Link
போட்டிப்போட்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்த மக்கள்

போட்டிப்போட்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்த மக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனிப்பட்ட ஒரு குடும்பத்தினரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா

1
15 mins agoshare
திருவள்ளூர் மீனவர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved