news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம்..
tv

Also Watch

தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம்..

மதுரை

561

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu(1)

2026 தேர்தலை சந்திக்க தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம் என மேலூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், விருதுநகர் எம்.பி யின் மாமனாரின் முகநூல் பதிவால் கூட்டணி கட்சியினர் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

எம்.பி மாணிக்கதாகூர் பேச்சால் கடும் அதிருப்தி
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றது. இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க வேண்டும் என விருதுநகர் எம்.பி மாணிக்கதாகூர் வலியுறுத்தி வருவது, திமுகவினர் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலூர் தொகுதிய காங்கிரஸுக்கு கொடுங்க
மேலூர் சட்டமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட தயாராகி வரும் நிலையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பிலும் கடந்த தேர்தலை போல இந்த முறையும் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

எம்.பி மாணிக்கதாகூரின் மாமனார் சர்ச்சை பதிவு
இந்நிலையில், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், விருதுநகர் எம்.பி மாணிக்கதாகூரின் மாமனாருமான ஆலத்தூர் ரவிச்சந்திரன் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மேலூர் அல்லது மதுரையில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம்
தற்போது, அவருடைய முகநூல் பக்கத்தில், திமுக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால் பாருங்க இல்லை என்றால் 2026 தேர்தலை சந்திக்க தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம், தேவைப்பட்டால் சந்திக்க தயாராக இருக்கின்றோம். உங்களின் அடாவடி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், இனி கூட்டணி வைத்தாலும் திமுக, காங்கிரசுக்கு ஓட்டு போடாது. காங்கிரஸ், திமுகவுக்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள். தேர்தலை தனியாக சந்திப்பதே இரண்டு கட்சிகளுக்கும் நல்லது என்று பதிவிட்டுள்ளார்.

வம்புக்கு போக மாட்டோம்ம்m வந்தால் விடமாட்டோம்
மேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இழப்பதற்கு ஒன்றுமில்லை, காங்கிரஸ்காரர்கள் மென்மையானவர்கள் வம்புக்கு போக மாட்டோம், வந்தால் சந்திப்போம் என்று பல்வேறு பதிவுகள் செய்திருப்பதால், இது மேலூர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இடையே சங்கடத்தையும், திமுக கட்சியினர் இடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Link
அறிவாலயத்தில் காங்கிரஸ்.. மாலை வரப்போகும் முக்கிய அறிவிப்பு..

அறிவாலயத்தில் காங்கிரஸ்.. மாலை வரப்போகும் முக்கிய அறிவிப்பு..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved