news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாழ்க்கையில் ஸ்வீட்டே வேண்டாம், ரூ.70 கோடிக்கு ஆன்லைனில் பீரங்கி ஆர்டர்
tv

Also Watch

வாழ்க்கையில் ஸ்வீட்டே வேண்டாம், ரூ.70 கோடிக்கு ஆன்லைனில் பீரங்கி ஆர்டர்

அடுத்து கப்பல், ரயிலா? வீட்டைவிட்டே ஓடிய வீரமணி

42

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒரே ஒரு ஸ்வீட் பாக்சுக்கு ஆசைப்பட்டு, தனது வீட்டு முகவரியை பதிவிட்ட இன்ஸ்டா இன்புளூயன்சருக்கு 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பீரங்கி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்து முகம் தெரியாத இணையதளவாசிகள் அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்தனர்.

"அடுத்து கப்பல், ரயில், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை வந்திறங்குவதற்குள் ஆர்டர்களை நிறுத்த வேண்டும்," என வீடியோவில் ஓடிவந்து போராடியும் வீணாய்போக, இடிந்துபோன இன்ஸ்டா இன்புளூயன்சர் இறுதியில் வீட்டையே காலி செய்துவிட்டு மூட்டை முடிச்சுடன் பரிதாபமாக வெளியேறி உள்ளார்.

ஓடவிட்ட நெட்டிசன்கள்...
இந்த உலகத்தில் யாருக்குமே பயப்படக்கூடாது என முகம் நிறைய ஆவேசத்துடன் வீரவசனம் பேசிய வீரமணியை வீட்டைவிட்டே நெட்டிசன்கள் ஓடவிட்டுள்ளது யாருமே எதிர்பார்க்காத சோகம்தான்.
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் இன்ஸ்டா இன்புளூயன்சர் வீரமணி சண்முகநாதன். தனக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் இல்லாவிட்டாலும் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் மூலமே, ஜி.பி.முத்து போன்று வாய்நிறைய நண்பர்களே நண்பர்களே என அழைத்தே ஃபேமஸ் ஆனார் வீரமணி.

ஒரே ஒரு பதிவால்...
தனக்கு 20 லட்சம் கடன் உள்ளது. மூன்றே மூன்று சட்டைகள்தான் உள்ளது. சொந்தமாக வீடு வாசல் கிடையாது என இதையெல்லாம் ஒரு பெருமை என்று பேசிய இவர், 36 ஆண்டுகள் வேலைக்கே செல்லாமல் பிழைப்பு நடத்துவதில் தான் ரெக்கார்ட் செய்யப்போவதாகவும் ஏதோ சாதனை போன்று பீத்தி இருந்தார்.

இதற்கு மத்தியில்தான், கடவுளின் சொந்த நாடான மலையாள மண்ணிற்கு தான் சுற்றுலா செல்வதாகவும், ஒரு பைசாகூட இல்லை, ஏதோ நீங்களாக பார்த்து அனுப்பினால் பேரூதவியாக இருக்கும் எனவும்கூறி சமீபத்தில் க்யூ ஆர் கோடை அனுப்பினார் வீரமணி.

அவருடைய வெள்ளந்தி மனதிற்கு ரூ.6 ஆயிரத்தை அனுப்பி மகிழ்ச்சியில் திளைக்க வைத்தனர் முகம் தெரியாத நண்பர்கள்.


ஸ்வீட் பாக்ஸ் கேட்டு...
சுளையாக 6 ஆயிரம் அனுப்பிய நண்பர்கள் ஆஃப்ட்ரால் ஒரு ஸ்வீட் பாக்ஸ் அனுப்பமாட்டார்களா? என பாவிமனம் ஏங்க, தனது வீட்டு முகவரியையே குறிப்பிட்டு காஜூ கட்லி, ஜிலேபி, லட்டு, குலாப் ஜாமூன் உள்ளிட்ட இனிப்புகளுக்காக காத்திருந்தார். ஆனால், வரப்போவது அதைவிட காஸ்ட்லியான பொருட்கள் என்பதும், டன் கணக்கில் லாரி லாரியாக வீட்டின் முன்பு வந்து வந்திறங்கும் என்பதையும் அவர் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

’CASH ON DELIVERY’
முதலில் ஒரு செப்டோ ஊழியர் பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வீரமணி வீட்டிற்கு வர, ’அய்யோ நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லை,’ எனக்கூறி அவரை அனுப்பி வைத்தார். அடுத்து, டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என நூற்றுக்கணக்கில் விலை உயர்ந்த பொருட்கள் லாரியில் வந்தது. அத்தனையும் ’ஒன்லி டெலிவரி’ என்றால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம். ஆனால், ’CASH ON DELIVERY’ என வந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார் வீரமணி.

இது மட்டுமா? வீரமணியின் கிட்னியும் தானமாக கிடைக்கும் என புரளியை கிளப்பிவிட்டு வீரமணியை கடுப்பாக்கினர்.

ரூ.70 கோடிக்கு...
அதிலும், சிலர் ஆம்புலன்ஸை ஆர்டர் செய்து அதிர வைத்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ரூ.70 கோடி மதிப்புள்ள பீரங்கியை ஆர்டர் போட்டுள்ளது போன்று ஒரு பார்சலை பார்த்த வீரமணிக்கு தன் இதயத்துடிப்பே நின்றுபோவதுபோல் இருந்தது. அடுத்து, ரயில், கப்பல், ஹெலிகாப்டர், ஃபிளைட் என விவகாரமாக, ஏதாவது ஆர்டர் போட்டு அந்த விவகாரம் மத்திய அரசு வரை சென்றால் என்ன ஆகும்?

போலீசார் வார்னிங்
பயந்துபோய், வீடியோவில் ஓடிவந்த வீரமணி, ‘ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது குற்றமா நண்பர்களே? இனி வாழ்க்கையில் ஸ்வீட் என்ற சொல்லையே மறந்துவிடுகிறேன், தயவுசெய்து ஆர்டர் செய்வதை மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள்,’ என கெஞ்சி மன்றாடினார்.

இதனிடையே, விவகாரம் காவல்துறை அதிகாரிகளின் காதுகள்வரை செல்ல, ‘என்ன MAN இதெல்லாம்?,’ என விசாரணையில் இறங்கி வார்னிங் கொடுத்தனர்.

தெருத்தெருவாக...
இதுஒருபுறமிருக்க, வீரமணி வசித்து வந்த ஹவுஸ் ஓனரும் அய்யோ சாமி இந்த மாத பத்து நாள் வாடகையே வேண்டாம், உங்களுக்கு புண்ணியமாய் போகும், வீட்டை மட்டும் உடனே காலி செய்துவிடு என ஒற்றைக்காலில் நின்றுவிட்டனர்.

இதனால், வேறுவழியின்றி மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்ற வீரமணி, நண்பர்களே வீட்டில் சோபாவில் தூங்கி கொண்டிருந்த தன்னை தெரு தெருவாக அலையவிடுவீர்கள் என நினைக்கவில்லை, தம்பி வீட்டை காலி செய்துவிட்டேன், எங்கு செல்வது என தெரியவில்லை என பரிதாபமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

புது வீட்டு அட்ரஸ் கிடைக்குமா?
அடடா, நம்மால் வீரமணிக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என நெட்டிசன்கள் வருத்தப்படுவார்கள் என எதிர்பார்த்தால், ”அண்ணா போறது தான் போறீங்க, புது வீட்டு அட்ரஸ் மட்டும் குடுத்துட்டு போங்க,” என மீண்டும் கமெண்டுகளில் வம்பிழுத்து வருகின்றனர்.

”எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்,” என்பதுபோல் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ்-க்காக தனது முகவரியை குறிப்பிட்டு, தற்போது கடைசியில் முகவரியையே இழந்து நிற்கும் வீரமணிக்கு வருத்தம் தெரிவிப்பதை தவிர நம்மால் வேறு என்ன செய்துவிட முடியும்?

ஆனாலும், தனது தனிப்பட்ட விவரங்களை வெளியிடும் இன்ஸ்டா இன்புளூயன்சர்களுக்கு இந்த சம்பவம் சிறந்த பாடம் என்பது மட்டும் உண்மை.

Related Link

"திருடர் குல தியாகிகளை கைது செய்வதா? நீதியை கொல்வதா? கடவுள் இல்ல குமாரு"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடடா.. அட்டகாசம்!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved