Also Watch
Read this
By: Web Team

திருப்பூரில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர், தட்டிக் கேட்ட பொதுமக்களிடம் அலட்சியமாக பேசியதால், மக்கள் தர்ம அடி கொடுத்தனர். கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற சாந்தாமணி என்கிற தனியார் பேருந்தை ஓட்டுநர் வெள்ளியங்கிரி அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து ஹாரன் அடித்தபடி முன்னாள் சென்ற வாகனங்களை ஒதுக்கி விட்டு சென்றதை, இதர வாகன ஓட்டிகள் தட்டிக் கேட்டனர். அதற்கு, ஓட்டுநரும், நடத்துநரும் அலட்சியாக பதில் கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பூர் TKT நிறுத்தத்தில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved