news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்
tv

Also Watch

வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்

வாணியம்பாடி, திருப்பத்தூர்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tIRUPATHUR

கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் : 

வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஐ ஜி அஸ்ரா கார்க் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ ஜி தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பூனேவிலிருந்து இருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை மாத்திரைகளுடன் 6 பேர் கொண்ட கும்பல் தப்பிச்செல்ல இருந்துள்ளனர்.

இதனை கண்காணித்த தனிப்படை போலீசார் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு சொல்ல இருந்த நபர்களை பின் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 6 இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவையை சேர்ந்த பிரசாந்த் (வயது 22), பிரதாப் (வயது 20), ஹாரிஸ் (வயது 20), அஸ்வின் (வயது 21), ஆகாஷ் (வயது 22), பிரசாந்த் (வயது 22) என தெரிய வந்தது.

மேலும் இளைஞர்கள் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை எடுத்து வந்து கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 6 இளைஞர்களிடம் இருந்து 1300க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
தேங்காய் சில்லு ஆட்டோவில் பட்டதாக குற்றச்சாட்டு

தேங்காய் சில்லு ஆட்டோவில் பட்டதாக குற்றச்சாட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved