Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 8ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பந்தல் கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் கோலகலமாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பந்தக்கால் நடும் நிகழ்வில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பந்தல் அமைத்தல், யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved