கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பல லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலை பொறிக்கப்பட்ட யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணா நகர் பகுதியில் கிருஷ்ணகிரி வனசரக அலுவலர் மற்றும் மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் யானை தந்தத்தை வீட்டில் பதுக்கியதாக ரஞ்சித் என்பவரையும் கைது செய்தனர்.