Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே செலுக்காடியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த யானை, சாலையில் நின்றிருந்த வாகனங்களை தும்பிக்கையால் தள்ளி சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
பகல் நேரத்திலேயே யானை உலா வந்ததால், வீட்டிலிருந்து வெளியே வர அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved