Also Watch
Read this
By: Web Team
விழுப்புரத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையிலான திமுகவினர், விழுப்புரம் புறவழிச்சாலையில் வழி நெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் உற்சாக வரவேற்பை பெற்றுக் கொண்ட துணை முதலமைச்சர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்றார். இதற்கிடையில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கட்சித் தொண்டர்கள் 4 பேரிடம் 40 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது குறித்து போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved