news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலி அரசு முத்திரைகள் பறிமுதல், 6 பேர் கொண்ட மோசடி கும்பல் கைது
tv

Also Watch

போலி அரசு முத்திரைகள் பறிமுதல், 6 பேர் கொண்ட மோசடி கும்பல் கைது

கள்ள நோட்டுகள்; பிரிண்டர்கள் சிக்கின

41

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, எண்ணூர் பகுதியில் போலி அரசு முத்திரைகள், கல்விச் சான்றிதழ்கள், கள்ளநோட்டுகள் தயாரித்ததாக ஆறு பேர் கொண்ட மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏராளமான போலி ஆவணங்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு மற்றும் மருத்துவத் துறைகளில் பணியில் சேர்ந்தவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரகசிய தகவல்...
சென்னை விம்கோ நகர், அம்பேத்கர் நகர் 4ஆவது தெருவில் உள்ள சந்தேகத்திற்குரிய அலுவலகத்தில் போலி அரசு முத்திரைகள் தயாரிக்கப்படுவதாக எண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய அலுவலகத்தில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது, வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பயன்படுத்தும் வகையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்ப், முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கள்ள நோட்டு முத்திரை
மேலும், 500 ரூபாய் கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட முத்திரைகள், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு, தனியார் கல்லூரிகளின் போலிச் சான்றிதழ்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்திய அச்சுப்பொறிகள் மற்றும் போலியாகத் தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள், மூடிகள் கைப்பற்றப்பட்டன.

ஆறு பேர் கைது, விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக எண்ணூர், எர்ணீஸ்வரர் கோவில் பகுதியை சேர்ந்த கருணாகரன், ஸ்டீபன் என்கிற ஜெயக்குமார், ஜான்சன், விக்டர், கருணாநிதி, சத்தியமூர்த்தி ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சுமார் 10 ஆண்டுகளாக போலி முத்திரை மற்றும் சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் அரசு மற்றும் மருத்துவத் துறைகளில் யாரேனும் பணியில் சேர்ந்துள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்

சேலத்தில் நள்ளிரவில் பயங்கரம், வெறும் 22 நிமிடங்களில் அரங்கேறிய சம்பவம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றி பெற்ற அல்-நஸ்ர் அணி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved