தஞ்சாவூர் மாவட்டம் வேங்குராயன் குடிக்காடு கிராமத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கிராமத்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்க, தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.