news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரைகுறை ஆடையில் மனைவி, கணவனும் மகனும் கண்ணீர் வீடியோ
tv

Also Watch

tv

Read this

அரைகுறை ஆடையில் மனைவி, கணவனும் மகனும் கண்ணீர் வீடியோ

அறையில் இருந்து ஓடிய கள்ளக்காதலன்

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பட்டுக்கோட்டை அருகே மனைவியை காணக் கூடாத கோலத்தில் கண்ட கணவர், காய்கறி வெட்டும் கத்தியால் முகத்தை குறிவைத்து குத்திக் கிழித்து விட்டு தனது மகனை தூக்கிக் கொண்டு தப்பி ஓடினார். எவ்வளவோ கெஞ்சியும் தன் பேச்சை மனைவி கேட்கவே இல்லை என சட்டையில் ரத்தம் தெறித்தபடி உருக்கமாக பேசி, கணவர் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் எதுவும் அறியாத பிஞ்சு மகனும் தந்தையுடன் சேர்ந்து அழுவது, காண்போரை கலங்க வைத்துள்ளது.

மனைவியின் தகாத உறவு
தஞ்சை மாவட்டம், இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜா. 40 வயதான இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அக்சயா என்ற மனைவியும் 4 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் வசித்து வந்தபோது மனைவி அக்சயாவிற்கு அங்குள்ள ஒரு இளைஞருடன் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. செல்போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள், கால் ஹிஸ்ட்ரி மூலம் அதனை கண்டுபிடித்த கணவர் ராஜா மனைவியை கண்டித்து உள்ளார். ஆனாலும், கள்ளஉறவு தொடர்ந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மனைவி, மகனுடன் குடியேறினார் ராஜா.

காணக் கூடாத காட்சி
கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் மனைவி கள்ளக் காதலனை தனது வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்த கணவர், அரைகுறை ஆடையில் மனைவி இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து முகத்தில் பளார் என அறை விட்டுள்ளார். தொடர்ந்து, அறையின் உள்ளே மறைந்திருந்த கள்ளக்காதலனை வெளியில் வரச்சொல் என வீடியோ எடுத்தவாறே கத்தி உள்ளார். கணவன் தன்னை காணக்கூடாத கோலத்தில் பார்த்ததை கண்டுகூட பெரிதாக அதிர்ச்சியடையாத அக்சயா ஏன் மென்டல் போன்று கத்திக் கொண்டிருக்கிறாய்? என கூலாக கணவரிடம் பேசினார். மேலும், இது மற்றொருவர் வீடு அதனால் கத்தாதே எனக் கணவருக்கு கண்டிஷன் போட்டார். அதுமட்டுமல்லாது, எதற்கு தன்னை அடித்தாய்? என நியாயமும் கேட்ட அக்சயா, கள்ளக்காதலனை வெளியே வாடா என கூறினார்.

கணவர் ஆத்திரம்
அறையை திறந்ததும் துண்டை காணோம், துணியை காணோம் என கள்ளக்காதலன் ஓட்டம்பிடிக்க, அதனால் மேலும் ஆத்திரமடைந்த கணவன் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் வாய், முகம், உதடு, கையில் ஆவேசமாக கீறி உள்ளார். அழகாய் இருப்பதால்தானே கள்ளக்காதலை கைவிட மறுக்கிறாய்? என கூறிக்கொண்டே முகத்தை குறிவைத்து கத்தியால் கிழித்த கணவர், மனைவியை அறையில் பூட்டி வைத்துவிட்டு வெளியில் விளையாடி கொண்டிருந்த தனது மகனை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வலி தாங்க முடியாமல் கத்திய அக்சயாவின் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அறைக்கதவை திறந்துவிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை நகர போலீசார் மகனுடன் தப்பி ஓடிய ராஜாவை தேடி ஆரம்பித்தனர்.

வீடியோ வெளியிட்ட கணவர்
இதனிடையே, ராஜா அழுதுகொண்டே பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. காவல்துறைக்கு வணக்கம் என ஆரம்பிக்கும் அந்த வீடியோவில், தனது மனைவியிடம் எவ்வளவோ கெஞ்சிக் கதறினேன், அப்படியும் தகாத உறவை கைவிடவில்லை என குமுறி அழுத ராஜா, தன் குடும்பமே அழிந்துவிட்டது, தன் மகனும் தன்னோடு சேர்ந்து உயிரிழக்கப் போகிறான் என உடைந்து பேசி உள்ளார்.

மனதை உருக்கும் வீடியோ
தன் குடும்பமே சுக்குநூறாக அழிய திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ஜோஸ் என்ற இளைஞர்தான் காரணம் எனவும் அவரை சும்மா விட வேண்டாம், ஒரு சலூனில் வேலை பார்ப்பதாகவும் கூறினார். தந்தை, அழுத போது சிறிதுநேரம் அழுத சிறுவன் அடுத்து இலைகளை பறித்து விளையாட ஆரம்பித்தான். மனதை உருக்கும் இந்த வீடியோ பலரையும் கண்கலங்க வைக்கிறது. மகனுடன் தலைமறைவாக இருந்த ராஜாவை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், ஏதும் அறியா அந்த சிறுவன் குழந்தைகள் நல காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு உள்ளான்.

Related Link
இன்ஸ்டா தோழியை பார்க்க வந்து உயிரை விட்ட சோகம்

இன்ஸ்டா தோழியை பார்க்க வந்து உயிரை விட்ட சோகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆகஸ்ட் 21-ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஜனநாயகன்

1
44 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau