நெல்லை மாவட்டம் கருப்பந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.மேலும் பாலத்தின் மீது அமைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாய்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால், மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி தகுந்த ஏற்பாடுகளை செய்ய மாநகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.